ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், இரு மகன்களுக்கு நீதிமன்றம் சம்மன் !

188

பனாமா கேட் ஊழல் வழக்கின் மேல்விசாரணைக்காக 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது இரு மகன்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள பனாமா கேட் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. நவாஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 19-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்களான ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் ஆகியோருக்கு தேசிய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் சம்மன் அனுப்பியுள்ளார்.