பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட, அந்நாட்டு உச்சநீதிமன்றம் வாழ்நாள் தடை..!

3692

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட, அந்நாட்டு உச்சநீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு காரணமாக பிரதமர் பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீப் தனது பதவியை இழக்க நேர்ந்து. இதையடுத்து நவாஸ் ஷெரீப்பிற்கு அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகி உள்ளார். இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. இதனால் நவாஸ் ஷெரீப் அரசியலை விட்டே விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.