ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகதோப்பு வனப்பகுதியில், நாட்டு வெடிகுண்டுகளுடன் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரந்த நபரை மம்சாபுரம் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயழிக்க செய்வதற்காக, சிவகாசி ஆயுதப்படையிலிருந்து சிறப்பு காவல்துறையினர் வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 5 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையிலும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.