தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றம்!

391

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை, தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி அதிரடியாக மாற்றப்பட்டார்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டிருந்தார். இதையறிந்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி, ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் பள்ளியின் தேசியக்கொடியை ஏற்றுவது முறையல்ல எனக்கூறி, பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.இதற்கான ஆணை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் திட்டமிட்டப்படி அப்பளிக்கு வந்த மோகன் பகவத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்..இந்நிலையில் பாலக்காடு உள்பட 5 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாலக்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த மேரிகுட்டி அம்மாநில பஞ்சாயத்து இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சுரேஷ் பாபு என்பவர் நியமிக்கப்பட்டார். இதனிடையே இது வழக்கமான ஒன்றுதான் என்று கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.