95 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் | ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்றும் தலைவர்கள்

189

நாட்டின் 12மாநிலங்களில் 95மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் காலையிலேயே வாக்கைப் பதிவு செய்தனர்.

நாட்டின் 12மாநிலங்களில் 95மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூர் ஜெயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இம்பாலில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார்.