எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து பணமோசடி செய்ததாக, திரைப்பட பைனான்சியர் போத்ரா சென்னை காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

191

எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து பணமோசடி செய்ததாக, திரைப்பட பைனான்சியர் போத்ரா சென்னை காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பணமோசடி புகாரில் எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திரைப்பட பைனான்சியர் போத்ரா, பச்சமுத்து மீதான புகார் மனு ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ளார். மொட்டசிவா கெட்டசிவா என்ற திரைப்படத்தை தயாரிக்க தனது நிறுவனத்தில் பச்சமுத்துவின் முன்னிலையில், அவரது மகன் ரவி பச்சமுத்து 7.5 கோடி பணம் பெற்றதாகவும், அதனை திருப்பி கேட்டால் பச்சமுத்துவின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, சைதாப்பேட்டையை சேர்ந்த கோகுல்தாஸ் என்பவர், கோயம்பேடு அருகே உள்ள தனக்கு சொந்தமான 3 ஆயிரம் சதுர அடி நிலத்தை, ரவி பச்சமுத்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அவரது அடியாட்கள் தன்னை மிரட்டுவதாகவும் சென்னை காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுவரை 17 முறை புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.