நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

231

நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதிகப்படியான குப்பைகளை எரித்தால் ஒரு முறைக்கு 25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தனிநபரோ அல்லது அமைப்போ திறந்த வெளியில் குப்பையை எரிக்கும்போது, சுற்றுச்சூழல் இழப்பீடாக அபராதம் செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சிறிய அளவிலான குப்பையை எரித்தால் ஒரு முறைக்கு 5 ஆயிரம் ரூபாயும், பெரிய அளவில் மொத்தமாக குப்பையை எரித்தால் ஒரு முறைக்கு 25 ஆயிரம் ரூபாயும் செலுத்தியாக வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதுதவிர, 2016-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மைச் சட்ட விதிகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 4 வாரங்களுக்கும் செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.