ஈஸ்டர் திருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறித்துவர்கள் சிறப்பு வழிபாடு

84

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறித்துவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மும்பை மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவில் நடந்த பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். கோவா மாநிலம் பனாஜியில் உள்ள தேவாலயங்களிலும் ஈஸ்டர் திருநாள் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தூய மரியன்னை பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டித் தீப தூபங்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.