நத்தம் அருகே ஐஸ் வியாபாரி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

191

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டி சாலை ஓரத்திலுள்ள புதர் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், நத்தம் நல்லாகுளத்தைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.