நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நடராஜன், தான் படித்த அரசு பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்..!

655

நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நடராஜன், தான் படித்த அரசு பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோணங்குட்டையூரில் பிறந்த நடராஜன் சங்ககிரி அரசுப் பள்ளியில் படித்தவர். நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் அவர் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் தான் படித்த சங்ககிரி பள்ளிக்கு வந்த நடராஜன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நடராஜன் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை குடும்பத்தில் பிறந்ததை நினைவு கூர்ந்தார். பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும் என்று நடராஜன் விருப்பம் தெரிவித்தார்.