செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா வடிவமைத்துள்ளது.

2005

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக முதல் முதலில் ஹெலிகாப்டரை பயன்படுத்த உள்ளது. இதற்காக விமானி இன்றி பறக்கும் அதிநவீன ஹெலிகாப்டரை வடிவமைத்த நாசா விஞ்ஞானிகள், அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க 4 ஆண்டுகள் உழைத்தனர். பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும் என தெரிவித்துள்ள நாசா, வரும் 2020 ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப உள்ளது.