நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 8வது சுற்று போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி ..!

155

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 8வது சுற்று போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நார்வேயில் நடந்து வரும் 6-வது செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வீரர்கள் பக்கேற்றுள்ளனர். இதன் 8வது சுற்று போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து முதல் இடத்தில் இருந்த ஆனந்த் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொடரில் இதுவரை நடந்த 8 போட்டிகளில் 3.5 புள்ளிகளை ஆனந்த் பெற்றுள்ளார்.