இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

245

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் கடந்த 5ம் தேதி நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், நர்சிங் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து மீண்டும் பெறப்பட்ட பி மாதிரியின் பரிசோதனை முடிவும் அதை உறுதி செய்ததை அடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரியோ ஒலிம்பிக்சில் நர்சிங் யாதவ் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஜார்ஜியாவில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க அவர் இன்று புறப்பட இருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது ரியோ அடையாள அட்டை முடக்கப்பட்டுள்ளது.