பிரதமர் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என, மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

233

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என, மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. பிரதமருக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, காதியால் ஆன கைத்துண்டுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.