மத்தியில் ஆளும் பாஜக கட்சியை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் தண்டிக்கப்படுவதுடன், கொலையும் செய்யப்படுகிறார்கள் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணாசாமி குற்றம்சாட்டியுள்ளார்..

புதுச்சேரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், கட்சிகளை விமர்சிக்கும்போது சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கும் ஒரே கட்சி பாஜக என குறிப்பிட்டார். பத்திரிகையாளர் சக்தி தான் சிறந்த சக்தி என கூறிய நாராயணசாமி, மத்தியில் ஆளும் பாஜக கட்சியை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் தண்டிக்கப்படுவதுடன், கொலையும் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரே மதம் இருக்க வேண்டும் என்ற விதத்தில் பாஜக செயல்படுவதாகவும் கூறினார்.