பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி

124

பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லா கட்சிகளும் அறிக்கை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர் ஆனால் பாஜகவினர் மட்டும் மதத்தை முன் வைத்தும் புல்வமா தாக்குதலை முன்வைத்தும் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.