மத்திய குழு வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட வேண்டும் : நாராயணசாமி கோரிக்கை .

211

புதுச்சேரியில் வறட்சி பாதித்த பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறினார். புன்செய் நிலங்களை ஆய்வு மேற்கொண்டு அதன் மூலம் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.