வருகிற தேர்தலில் மோடி அரசை விரட்டுவதே காங்கிரசின் நோக்கம் – முதலமைச்சர் நாராயணசாமி

79

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை விரட்டுவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அடுத்த மாதம் 4-ம் தேதி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உட்பட 21 கட்சிகள் இணைந்து டெல்லியில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக ஈடுபட்டு வருதாகவும், அக்கட்சியில் தற்போது கீறல்கள் விழுந்துள்ளதால், அடுத்து பிரதமர் வேட்பாளராக நிதின்கட்கரியை கொண்டு வர முயற்சி நடந்து வருவதாகவும் நாராயணசாமி குறிப்பிட்டார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை விரட்டுவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.