திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் நாராயணசாமிக்கு சிறப்பு தரிசனம்..!

153

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற புதுவை முதல்வர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமா கொண்டுள்ளதாக கூறினார். மேலும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்யும்போது மனதுக்கு அமைதி ஏற்படுதுவதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல் பிரபல நடிகை ப்ரணதி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழுமலையானை தரிசிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். சமீபத்தில் வெளியான ”ஹலோ குரு பிரேம கோசமே” என்ற திரைப்படம் வெற்றியை தொடர்ந்து எழுமலையானை தரிசிக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.