ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி

638

இலங்கை இறுதிகட்ட போரின்போது, பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரும் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் முடிவுக்கு மாற்று கருத்து எதுவும் சொல்லவில்லை என்றார்.