காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

209

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் என்று கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி தமது மௌனத்தை கலைக்கவேண்டும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.