கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

103

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். சமுதாய சீர்திருத்தம், பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு அவர் வழங்கி இருப்பதாக நாராயணசாமி குறிப்பிட்டார். எனவே டாக்டர் எம்ஜிஆருக்கு வழங்கியது போல், கருணாநிதிக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.