அந்தஸ்து பற்றி பேசுவதற்கு கிரண்பேடிக்கு எந்த தகுதியும் இல்லை : முதலமைச்சர் நாராயணசாமி

487

மாநில அந்தஸ்து பற்றி பேசுவதற்கு கிரண்பேடிக்கு எந்த தகுதியும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்ட உழவர் இல்லத்தை திறந்து வைத்து பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுநர் கிரண்பேடி நிர்வாகி போல் அல்லாமல் அரசியல்வாதியாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டிய அவர், ரங்கசாமி டெல்லிக்கு வருவதற்கு பயப்படுவதாக கூறினார். புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் போன்று கிரண்பேடி செயல்பட்டு வருவதாகவும் நாராயணசாமி சாடினார்.