துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுகிறார் – நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

162

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டு புதுச்சேரி அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்ட வரையறையானது துணைநிலை ஆளுநருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பான ஆளுநரின் கேள்விகளுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்நோக்கத்துடன் செயல்பட்டு, சட்டவரையறைக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஆளுநரே பொறுப்பு என்றும் நாராயணசாமி கூறினார்.