மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

297

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கே முழு அதிகாரம் இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாகூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் நிறுவன ஊழியர்களை அரசுத்துறை இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். நிர்வாக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை அரசு பொறுப்புகளில் அமர்த்த மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க கர்நாடகாவின் உறுப்பினர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த அவர், ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றார். அரசு நிர்வாகத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக எடுக்கும் முயற்சிகளை புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்தார்.