தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம்

312

தனது சிறப்பான திட்டங்கள் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பின்னர் பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் என்றும் அவரது திட்டங்கள் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் மூன்று எம்எல்ஏக்கள் நியமனம் செய்யப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.