புதுச்சேரியில் ஆட்சியை கலைக்க பாஜக அரசு முயற்சி !

291

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆட்சியை கலைத்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. தற்போது, மூன்று நியமன எம்எல்ஏக்களை பாஜக அரசு நியமித்துள்ளதால், புதுச்சேரியில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே, ஆட்சியமைக்க 17 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை. திமுக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் இருவரை இழுக்க, மத்திய பாஜக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் காங்கிரசும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம், புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.