புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக கூடுதல் நிதிகோரி பிரதமரை சந்திக்க முதலமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லி செல்கிறார்.

256

புதுச்சேரி மாநிலத்தில் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து விளக்கவும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தியும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச முதலமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லி செல்கிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் ஏனாமில் இருந்து இன்றிரவு டெல்லி செல்கின்றனர்.
நாளை அனைவரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து புதுச்சேரி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல். ஏ.,க்கள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
டில்லியில் காங்., தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரை சந்தித்து ஆசி பெற உள்ளனர். 24ம் தேதி மீண்டும் புதுச்சேரி திரும்புகின்றனர்.