தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் 3-வது நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் – எர்ணாவூர் நாராயணன்

168

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் 3-வது நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் 3-வது நீதிபதி விரைவில் செயல்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறிய அவர், சேலம் எட்டு வழிச்சாலை தேவையில்லாதது என்று தெரிவித்தார்.