பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் - முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி சட்டசபையில் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வின் குமார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.