புதுச்சேரி மாநிலத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி-முதல்வர் நாரயணசாமி!

328

புதுச்சேரி மாநிலத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளி நாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய உள்ளதாக, முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் மணலை இறக்குமதி செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதற்காக புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதற்காக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.