புதுச்சேரி அரசுக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க வேண்டும் – முதல்வர் நாராயணசாமி

80

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நியமன எம்எல்ஏக்களின் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் நாராணயசாமி, புதுச்சேரி அரசுக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.