கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரிய வகை நரசிம்மி சிலையை, கும்பகோணம் கோயிலில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

528

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரிய வகை நரசிம்மி சிலையை, கும்பகோணம் கோயிலில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நரசிம்மி சிலையை, பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் 2000ஆம் ஆண்டு கடத்தி சென்று சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தான். இதனையடுத்து, நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்த நரசிம்மி சிலையினை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலையின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். இந்தியா கொண்டு வரப்பட்ட சிலை, விருத்தாச்சலம் நீதிமன்ற உத்தரவுபடி, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.