ஆஸ்திரேலியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நரசிம்மி சிலை மீட்பு !

342

ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நரசிம்மி சிலை ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நரசிம்மி சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். இந்த சிலை 15 வருடங்களுக்கு முன்பாக, விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டது. இந்த சிலை ஆயிரத்து 40 ஆண்டுகள் பழமையானது. சிலைகள் திருட்டு தொடர்பாக, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆஸ்திரேலியா சென்று இதனை மீட்டனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாறு தொடர்புடைய சிலைகளுக்கு மதிப்பு அதிகம் என்று தெரிவித்த அதிகாரிகள், போதை மருந்து, ஆயுதங்களுக்கு அடுத்ததாக, சிலை கடத்தல் அதிக அளவில் நடைபெறுவதாக கூறினர்.