நன்னடத்தை காரணமாக மொத்தம் 38 ஆயிரம் சிறை கைதிகளை நிபந்தனையுடன் விடுவிக்க துருக்கி அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது

157

நன்னடத்தை காரணமாக மொத்தம் 38 ஆயிரம் சிறை கைதிகளை நிபந்தனையுடன் விடுவிக்க துருக்கி அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
துருக்கியில் கடந்த மாதம் 15ம் தேதி ராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது புரட்சியாளர்களை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத்தொடர்ந்து புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறி 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதனால் துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் சிறை கைதிகள் மற்றும் சிறையில் உள்ள இடம் நெருக்கடியை சமாளிக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டவர்கள், குறைவான வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க இருந்தவர்கள் என மொத்தம் 38 ஆயிரம் பேரை நிபந்தனையுடன் விடுவிக்க துருக்கி அரசு அதிரடி உத்தரவிட்டது. அதே நேரத்தில் கொலை, உள்நாட்டு கலகம், பாலியல் குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்.