டிடிவி தினகரனின் பெயரை சொல்ல கூட அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை : நாஞ்சில் சம்பத்

338

டிடிவி தினகரனின் பெயரை சொல்ல கூட அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை என நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடைபெற்ற ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மே 17 இயக்க நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு ரெய்டு மூலம் தமிழக அமைச்சர்களை அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் டிடிவி தினகரனின் பெயரை கூட சொல்ல அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத்.,வரம் கொடுத்த சாமியின் தலையில் கை வைப்பதா என்றும் கேள்வி எழுப்பினார்.