டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக அறிவித்துள்ளார்..!

441

டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் உடன்பாடு இல்லை என்று கூறினார். அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து தன்னால் பேச முடியாது என்று கூறிய நாஞ்சில் சம்பத், டிடிவி அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தான் இனி எந்த அரசியலில் இல்லை என்று திட்டவட்டமாக கூறிய நாஞ்சில் சம்பத், இனி தன்னை இலக்கிய மேடைகளில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.