நந்தம்பாக்கம் 158-வது வார்டில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி, அதே கட்சியை சேர்ந்த மூவர் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

193

நந்தம்பாக்கம் 158-வது வார்டில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி, அதே கட்சியை சேர்ந்த மூவர் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை நந்தம்பாக்கம் 158-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு கவிதா, ராஜசேகர் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களை மாற்றக்கோரி, நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி, அதிமுகவை சேர்ந்த தேவநாதன், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை கீழே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.