இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா மற்றும் வீரேந்திர சவுத்ரி திருமணம் இன்று நடைபெற்றது..!

867

திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா மற்றும் வீரேந்திர சவுத்ரி திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகை நமீதா, விஜயகாந்த்க்கு ஜோடியாக எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சரத்குமார், சத்தியராஜ், விஜய், அஜித்
உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.
நமீதாவின் காதலரும், தயாரிப்பாளரும், அறிமுக நடிகருமான வீரேந்திர சவுத்ரியுடன் இன்று திருமணம் நடைபெற்றது. திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதற்கு முன்னதாக திருப்பதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மெகந்தி நிகழ்ச்சியும், நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.