வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது..!

219

வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2017-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 94 லட்சத்தும் 84 ஆயிரத்து 492 பேரும், பெண்கள் 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேரும், மாற்றுப்பாலினத்தவர்கள் 5 ஆயிரத்து 242 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள போலி வாக்காளர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி 4 லட்சத்து 79 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.