நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில்,சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

249

நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில்,சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருவமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவரது நண்பரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக இந்த மாதம் 8-ம் தேதி நேரில் ஆஜராக சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 3-வது நாளான இன்று சுப்பிரமணியனின் நண்பர்கள், மனைவி மற்றும் மகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.