காவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..!

243

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி காணாமல் போன சிறுமியின் உடலை தீயணைப்பு வீரர்கள் இன்று மீட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பகுதியை சேர்ந்த சரவணன் குடும்பம் உட்பட 6 பேர், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாரத விதமாக 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சரவணன், ஜோதிமணி, தேவி, தீபகேஷ், தாரகேஷ் ஆகிய ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஐந்து வயது சிறுமியின் உடலை மட்டும், தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், காவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் இன்றும் ஈடுபட்டனர். நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 18 தீயணைப்பு வீரர்கள் காலை 6 மணி முதல் சிறுமியின் உடலை தேடி வந்த நிலையில், அனிச்சம்பாளையம் பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.