திருமணிமுத்தாறில் நுரையுடன், சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

317

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் நுரையுடன், சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால், திருமணி முத்தாறில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மதியம்பட்டி பகுதியில் உள்ள முக்கிய தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததால், மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர். ஆற்று நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் சேர்ந்து கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீர் துர்நாற்றத்துடன் இருப்பதால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.