நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு, ஜாமின் மனு தள்ளுபடி நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..!

148

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய அருள்சாமி, செல்வி, லீலா ஆகிய மூன்று பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வது தொடர்பாக, செவிலியர் அமுதவள்ளி, அமுதவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன், செல்வி, லீலா, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், அருள் சாமி, பர்வீன், ஹசீனா நிஷா, சாந்தி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை விற்ற பெற்றோர், குழந்தைகளை வாங்கியவர்கள், பிறப்பு சான்றிதழ் வழங்கியவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய அருள்சாமி, செல்வி, லீலா ஆகிய மூன்று பேரும் ஜாமின் கோரி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், 3 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார்.