நாமக்கல் அருகே சொகுசு ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

340

நாமக்கல் அருகே சொகுசு ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று 38 பயணிகளுடன் நாமக்கல் நோக்கி சென்றுக்கொண்டிந்தது. நாமக்கல் அடுத்த கருங்கல்பாளையம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, பேருந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் இருந்தவர், உயிரிருக்கு ஆபத்தான நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.