பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோட்டக்கலை கல்வி : அமைச்சர் செங்கோட்டையன்

140

விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி, அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோட்டக்கலை கல்வியை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பள்ளிக்கல்வி கலைத்திருவிழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்தாண்டு முதல், பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளில் வேளாண்மை ஹார்ட்டிகல்ச்சர், டூரிசம் மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட தொழில் சார்ந்த கல்வி கற்றுத்தர் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இதில், எந்த வகை தொழில் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து ஒரு மாதத்தில் அறிவி்க்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.