உயர் பதவிகளுக்கு செல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள், அரசியலுக்கும் வரவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

397

உயர் பதவிகளுக்கு செல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள், அரசியலுக்கும் வரவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நாமக்கல்லில் 108வது அண்ணா பிறந்தநாள் விழா திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. மோகனூர் சாலையில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு, மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில அளவிலான நடைபெறும் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை, கவிதை போட்டிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் பேசிய ஸ்டாலின், பள்ளி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க இதுபோன்ற போட்டிகளை அண்ணா பிறந்த நாளில் நடத்துவதாக தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பேருக்கு 6 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டதாக கூறினார். பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள், அரசியலுக்கு வரவேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பேச்சுப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், விபி.துரைசாமி, காந்தி செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.