நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு முட்டை விலை குறைந்துள்ளது.

374

நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு முட்டை விலை குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 மாதங்களாக முட்டை விலை 4 ரூபாய் 35 காசுகளாக இருந்தது. ஆனால் தற்போது முட்டை விலை திடீரென 20 பைசா குறைந்து, 4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தொடங்கியுள்ள சாவன் விரதம் காரணமாக முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்திலிருந்து வட மாநிலங்களுக்கு நாள்தோறும் 1 கோடி முட்டை அனுப்பப்படுகிறது. ஆனால் தற்போது விரதம் காரணமாக அதில் 50 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் கூறி உள்ளனர். முட்டை விலை மேலும்குறைய வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.