சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த தாயை கத்தியால் குத்தியதால் பரபரபப்பு ஏற்பட்டது.

292

சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த தாயை கத்தியால் குத்தியதால் பரபரபப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை பி.வி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராஜகோபால், பல் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். அவருடைய அண்ணன் ராஜசேகருக்கும், இவருக்கும் கொஞ்ச காலமாக சொத்து பிரிப்பதில் பிரச்சினை இருந்துவருகிறது. இந்நிலையில் டாக்டர் ராஜகோபால், வீட்டை சுற்றி சுற்றுசுவர் எழுப்பியுள்ளார். இதனைக் கண்டித்த அண்ணன் ராஜசேகரை தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முற்பட்டார். அப்போது அவர்களுடைய தாய் தடுக்க வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த ராஜசேகர் உறவினர்கள் டாக்டர் ராஜகோபாலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சண்டையில் காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.