நாமக்கல் அருகே ஜோதிடம் பார்க்க சென்ற பெண்ணை கடத்த முயன்றதாக ஜோதிடரை பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

205

பரமத்தி வேலூர் அருகே நொணாங்காட்டு புதூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இந்துமதி குடும்பத் தகராறு காரணமாக கொடுமுடியில் உள்ள ராஜா என்ற ஜோதிடரிடம் சென்றுள்ளார்.

தோஷம் உள்ளதாக கூறிய ஜோதிடர் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், இந்துமதியை வசியம் செய்து இரவு நேரத்தில் காரில் கடத்த முயன்றுள்ளார். இதனை அறிந்த மக்கள் காரை சுற்றிவளைத்து ஜோதிடரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பரிகாரம் செய்வதற்கு இதுவரை 4 லட்சம் ரூபாய் ஜோதிடருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜோதிடர் ராஜாவிடம் பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.